வடக்கு யோர்க் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் கொள்ளையடித்த நபரை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கீல் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ தெற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தின் முற்பகுதியில், மதியம் 2 மணியளவில் நுழைந்த குறித்த இனந்தெரியாத நபர், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த 87 வயது பெண்ணை கீழே விழுத்திவிட்டு வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
முன் கதவு வழியாக அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்னர் குறித்த நபர் தனது மறைந்த கணவரின் தனிப்பட்ட பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை கொள்ளையடித்துச் சென்றார் என பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) சி.சி.டி.வி கெமரா பதிவுகளை கைப்பற்றிய பொலிஸார், கொள்ளையரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..