இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசாங்கதகவல்கள் தெரிவிக்கின்றன
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை வருடத்தை கடந்துள்ள நிலையில், அதனை கலைப்பதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உள்ளது.
இதற்கமைய, இன்று நள்ளிரவின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.
2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், அமைக்கப்பட்ட 8 ஆவது நாடாளுமன்றம் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூடியது.
இதற்கமைய, 8ஆவது நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை வருடத்தை கடந்துள்ள நிலையில், அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் வசமுள்ளது.
தமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தாம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
அத்துடன், தற்போதைய நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாதமையினால், விரைவாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், ஏப்ரல் 25, 27, 28, 29 அல்லது மே மாதம் 4 திகதி முதலான ஏதாவது ஒரு திகதியில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அம்பன்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட வேண்டும்
அதில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம், வாக்களிப்புக்கான தினம் மற்றும் மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் தினம் தொடர்பில் அறிவிக்கப்பட வேண்டும்.
இன்றைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல்செய்ய முடியும்.
வாக்களிப்பு தினமானது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 66 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
அதற்கமைய ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும்.
அவ்வாறெனில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் ஏப்ரல் 25, 27, 28, 29 மற்றும் மே மாதம் 4 ஆம் திகதிகளில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பி;ரிய தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..