23,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள மாணவர்கள்

உயர் கல்வி அமைச்சுக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட இரண்டு பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 22 பல்கலைக்கழக மாணவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அவர்கள் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறியமை, நீதிமன்றை அவமதித்தமை, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் இந்த குற்றங்களுக்காக ஆதரவு வழங்கியமை தொடர்பில் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ருஹூணு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒடுக்குமுறையை நிறுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து உயர் கல்வி அமைச்சுக்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த மாதம் 27 ஆம் திகதி இந்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள மாணவர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு