குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் ஒன்று படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் – தம்புள்ளை வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாய், தந்தை, மகன், மகள், சாரதி மற்றும் பயண வழிகாட்டியும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீகிரிய சுற்றுலா ஹோட்டல் நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்கள் 54, 56, 21 மற்றும் 23 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்தர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் பிரான்ஸ் நாட்டவர்கள் ஆபத்தான காயங்களுக்கு உள்ளான வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..