சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், ஆசியா கண்டத்தை கடந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு படுவேகமாகப் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், எண்ணெய் வளம்மிக்க ஈரான் நாட்டில் இதுவரை 978 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் கியானோவ்ஷ் ஜஹான்போவ்ர் இன்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவலாக சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இவர்களில் 385 பேர் புதிய நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், இந்நோயின் தாக்கத்துக்கு உள்ளானவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததால், இன்றைய நிலவரப்படி ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..