15,Jan 2025 (Wed)
  
CH
உலக செய்தி

துபாயில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, ஸ்டுடியோ - வழிகாட்டியாக ஏ.ஆர்.ரகுமான்

துபாயில் இந்த ஆண்டும் (2020) வழக்கம்போல் சர்வதேச பொருட்காட்சி நடைபெறவுள்ளது.

‘சிந்தனைகளை இணைத்து, எதிர்காலத்தை படைப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தொடங்கி, 10-4-2021 வரை நடைபெறும் இந்த பொருட்காட்சியை பார்வையிட உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 50 பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து துபாய் நகரை மையமாக வைத்து ‘பிர்தவுஸ்’ (சொர்க்கம்) என்ற பெயரில் புதிய இசைக்குழு மற்றும் இசை ஒலிப்பதிவுக்கூடம் (ஸ்டுடியோ) ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர்.

இவற்றுக்கு வழிகாட்டியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து செயல்பட ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு துபாயில் நடைபெறும் சர்வதேச பொருட்காட்சியிலும் 2021-ம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அன்றும் நடைபெறும் ‘பிர்தவுஸ்’ இசைக்குழுவினரின் இரு இசை நிகழ்ச்சிகளையும் ஏ.ஆர்.ரகுமான் தலைமையேற்று நடத்தவுள்ளார்.

இந்த இசைக்குழுவில் உள்ள பெண் கலைஞர்கள் ஐக்கிய அரபு அமீரகம், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




துபாயில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, ஸ்டுடியோ - வழிகாட்டியாக ஏ.ஆர்.ரகுமான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு