15,Jan 2025 (Wed)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸ் பீதி: ஒரு வாரத்துக்கு ஆப்கானிஸ்தான் எல்லையை மூடும் பாகிஸ்தான்

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு படுவேகமாக பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 80 ஆயிரம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஈரானுக்கு யாத்திரை செய்யச்சென்று சமீபத்தில் தாய்நாடு திரும்பிய சுமார் 8 ஆயிரம் பேரிடம் நடத்திய பரிசோதனையில் சுமார் 200 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பாகிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன் எதிரொலியாக ஈரான் நாட்டின் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானுக்கு உட்பட்ட கராச்சி மற்றும் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - பாகிஸ்தான் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் கடந்த வியாழக்கிழமையில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும், சாலை மார்க்கமாகவும் ரெயில்கள் மூலமாகவும் ஈரான் - பாகிஸ்தான் இடையே ஆப்கானிஸ்தான் வழியாக மக்கள் சென்று வருகின்றனர். 4 பேர் கொரோனா வைரஸ் நோய் தாக்கி, சிகிச்சை பெற்று வருவதாக பாகிஸ்தான் அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை (மார்ச் 2-ம் தேதி) காலையில் இருந்து அடுத்த 7 நாட்களுக்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லையை ஒரு வாரத்துக்கு மூடி வைப்பதாக பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொரோனா வைரஸ் பீதி: ஒரு வாரத்துக்கு ஆப்கானிஸ்தான் எல்லையை மூடும் பாகிஸ்தான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு