30,Apr 2024 (Tue)
  
CH
கனடா

ஒன்ராறியோ மாகாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா உறுதி!

ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளாது.

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது ஒன்ராறியோ மாகாணத்தில் 31 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டவர்கள், 40 மற்றும் 60 வயதுடைய இரு பெண்களும் 60 வயது ஆணும் அடங்குகின்றனர்.

கடந்த மார்ச் 2ஆம் திகதி கொலராடோவிலிருந்து 40 வயதுப் பெண் வந்தவர் எனவும், அவர் சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், நேற்று இரவு 60வயதுப் பெண் மார்ச் 2 ஆம் திகதி பிரான்சிலிருந்து கனடாவுக்குத் திரும்பியுள்ளார். இவர் மார்ச் 7ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள ஸ்கார்பரோ ஹெல்த் நெற்வேர்க் சேவையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதனை மேற்கொண்டார்.

இதேவேளை, 60 வயது ஆண், கடந்த மார்ச் 3ஆம் திகதி வோஷிங்ரனில் இருந்து கனடாவுக்குத் திரும்பிய நிலையில் மார்ச் 7 அன்று ரொறன்ரோவில் உள்ள நோர்த் யோர்க் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை ரொறன்ரோ சுகாதார அமைச்சு உட்பட கனடா அரசு மேற்கொண்டுள்ளது.





ஒன்ராறியோ மாகாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா உறுதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு