01,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

கொரோனாவின் தாக்கம் உலகளவில் எவ்வாறுள்ளது

கொரோனா வைரஸ் தாக்கத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவே அதிக விலை கொடுத்தது. எனினும், உலகளவில் இதுவரை அதிக விலை கொடுத்து வந்த நாடுகள் பலவற்றில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தென்பட்ட ஆறுதலான தரவு நேற்று பதிவாகியது.

பிரான்ஸ், இத்தாலியில் உயிரிழப்புக்களில் கணிசமான வீழ்ச்சி தென்பட்டது.

மார்ச் 19ஆம் திகதிக்கு பின்னர் குறைந்தளவான உயிரிழப்பு நேற்று இத்தாலியில் பதிவானது. கடந்த 24 மணித்தியாலத்தில் 431 உயிரிழப்புக்கள் பதிவாகின. மூன்று வாரங்களில் குறைவான எண்ணிக்கையாக கடந்த சனிக்கிழமை 510 பேர் இத்தாலியில் உயிரிழந்தனர். எனினும், ஞாயிற்றுக்கிழமை அது அதிகரித்து 619 ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று மீண்டும் வீழ்ச்சியடைந்தது.

உலகளவில், கொரோனா வைரஸால் 114,201 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1,852,533 பேர் தொற்றிற்குள்ளாகினர். 423,399 பேர் குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 1,528 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 22,105 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 27,523 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 560,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேர உயிரிழப்பு 737. இதுவரை 10,612 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 5,288 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 84,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்

கடந்த 24 மணித்தியாலத்தில் 603 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 17,209 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3,804 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 166,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ்

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 561 உயரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 14,393 ஆக உயர்ந்தது. புதிதாக 2,937 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 132,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி

கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலியில் 431 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 19,899 ஆக உயர்ந்தது. புதிதாக 4,092 பேர் பாதிக்கப்பட்டவர். இதுவரை 156,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம்

கடந்த 24 மணி நேரத்தில் 254 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,600 ஆக உயர்ந்தது. புதிதாக 1,629 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 29,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான்

கடந்த 24 மணித்தியாலத்தில் ஈரானில் 117 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 4,474 ஆக உயர்ந்தது. புதிதாக 1,657 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 71,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி அமைச்சர் இராஜினாமா

கொரொனா வைரஸ் பரவலை தடுக்க, மிக தாமதமாக துருக்கியின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவை அமுல்ப்படுத்துவதாக துருக்கி அறிவித்தமைக்கு கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, அனைத்து பொறுப்பையும் ஏற்று பதவி விலகுவதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு அறிவித்துள்ளார்.

“நான் ஒருபோதும் காயப்படுத்த விரும்பாத எனது நாடும், என் ஜனாதிபதியும், என் வாழ்நாள் முழுவதும் நான் உண்மையாக இருப்பேன், என்னை மன்னிக்கட்டும்” என்று அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜோர்டான்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த லொக் டவுனை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதாக ஜோர்டான் அறிவித்துள்ளது. பாடசாலைகள், பல்கலைகழகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

சோமாலிய மாகாண அமைச்சர் மரணம்

சோமாலியாவின் ஹிர்ஷபெல் மாகாணத்தின் நீதி அமைச்சர் கலீஃப் முமின் டோஹோ, கொரொனா தாக்கத்திற்கு உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மொகாடிஷுவின் மார்டினி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அண்மையில் பிரித்தானியாவில் இருந்த அவர் நாடு திரும்பியிருந்தார். அதன்பின்னர் கொரோனா அறிகுறி அவரில் வெளிப்பட்டிருந்தது.

லிபியாவில் தாக்குதல்

லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள அல்-கத்ரா மருத்துவமனையின் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லிபியாலின் போர்ப்பிரவு கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான ஆயுதப் போராளிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த வைத்தியசாலை, கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்கும் இடமாகும்.

இந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்தனர்.

லிபியாவில் கொரோனாவினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்போடிய சிறை

சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட வீடியோ ஒன்றில், கம்போடிய சிறைச்சாலைகளில் கைதிகள் நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் பதிவாகியிருந்தன. கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலப்பகுதியில் கம்போடியாவில் சிறைக்கைதிகள் மனிதாபிமானமற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்தோனேஷியா

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நகரங்களிலிருந்து தமது சொந்த கிராமங்களிற்கு பெருந்தொகையில் மக்கள் திரும்புவதை கட்டுப்படுத்த இந்தோனேஷியா நடவடிக்கையெடுத்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை.

ரமலான் காலத்தில் சுமார் 75 மில்லியன் மக்கள் பெரு நகரங்களிலிருந்து கிராமங்களிற்கு செல்கிறார்கள்.

பொது பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மற்றும் கப்பல்கள் பயணிகள் இருக்கைகளில் பாதியை மட்டுமே நிரப்ப அனுமதிக்கப்படும். தனியார் காரில் பயணிப்பவர்கள் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.




கொரோனாவின் தாக்கம் உலகளவில் எவ்வாறுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு