17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

5,000 ரூபாய்கள் கொடுப்பனவு வழங்கப்படவுள்ள மேலதிக பயனாளிகள்

கொரோனா நோய்த்தொற்றுத் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றி இருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5, 000 ரூபாய்கள் கொடுப்பனவை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதே போன்று, பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்து அல்லது சிற்றூந்து உரிமையாளர்கள், பெற்றோர்களிடம் மாதாந்தக் கட்டணத்தை அறவிடுவது குற்றமாகும்.

இவ்வாறான பேரூந்து அல்லது சிற்றூந்து உரிமையாளர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு பெற்றோரிடம் கட்டணம் அறவிட்டு, அவர்களை இக்கட்டான நிலைமைக்குத் தள்ள வேண்டாம் எனவும் அரசாங்கம் கேட்டுக்கொள்ளுகின்றது.

இதே வேளை தற்போது பயன்களைப் பெறும் மற்றும் எதிர்பார்த்திருக்கும் முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக 5,000 ரூபாய்கள் கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, அடையாளம் காணப்பட்டு, காத்திருப்புப் பட்டியலிலும் உள்ளடக்கப்படாதவர்கள் இருப்பினும் அவ்வாறான முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த 5,000 ரூபாய்கள் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 574,387 முதியவர்கள் தவிர்ந்த, அதற்கு மேலதிகமாக மேலும் 61,615 முதியவர்களுக்கு 5,000 ரூபாய்கள் கொடுப்பனவை வழங்கப்படவுள்ளது.

கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 109,494 மாற்றுத்திறனாளிகளுக்கு மேலதிகமாக மேலும் 14,195 பேருக்கு 5,000 ரூபாய்கள் கொடுப்பனைவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது கொடுப்பனவு பெற்றுவரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 38,747 சிறுநீரக நோயாளிகளுக்கு மேலதிகமாக மேலும் 5,884 சிறுநீரக நோயாளிகளுக்கு 5,000 ரூபாய்கள் கொடுப்பனைவு வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மேற்படி கொடுப்பனவுகள் கிராம சேவகர்களால், குறித்த பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுவதற்கு அத்தியாவசிய சேவைகளுக்கான சனாதிபதி செயலணி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.




5,000 ரூபாய்கள் கொடுப்பனவு வழங்கப்படவுள்ள மேலதிக பயனாளிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு