06,Apr 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மன்னாரில் துப்பாக்கி தயாரித்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்

மன்னார் மடு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரிய குஞ்சுகுளம் கிராமத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கியுடன் தந்தை மகன் ஆகிய இருவரும் மடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (27) இரவு 10 மணியளவில் மடு காவல்துறை குஞ்சுக்குளம் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோத துப்பாக்கியுடன் 25 வயதுடைய மகனும், 50 வயதுடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மடு காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் மடு காவல் நிலையத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிறோசன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




மன்னாரில் துப்பாக்கி தயாரித்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு