போர் காலத்தில் இரு கால்களின் வலுவை இழந்த இரண்டு சிறுமிகள் க.பொ.த சாதாரண நிலை தேர்வில் உயர் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் போரின் போது வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக கால்களின் வலுவை இழந்த இரண்டு சிறுமிகள் இந்த ஆண்டு க.பொ.த சாதரண தரம் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். முல்லைத்திவிலுள்ள வித்யானந்தா வித்யாலயாலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளே மேற்கண்ட முடிவுகளைப் பெற்றுள்ளனர். கங்காதரன் பவதாரினி என்ற மாணவி A 8 மற்றும் B ஒன்று என பெற்றுள்ளார். அவரது தந்தை போரின் போது வெடிகுண்டு தாக்குதலால் பலியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிநேகிதியான மதியழகன் விதுர்ஷிகா A 6 , B 2 மற்றும் C 1 எனப் பெற்று க.பொ.த சாதாரண நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தடைகளை எதிர்கொண்டு கல்வி கற்ற இந்த மாணவிகளின் சாதனை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இந்த மாணவர்களின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களை நாமும் வாழ்த்துவோம்
இலங்கை செய்தி
0 Comments
No Comments Here ..