ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதனையடுத்து, அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் கேட்டுக்கொண்டுள்ளார்.
54 வயது நிரம்பிய மிக்கைல் வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.
இந்தநிலையில் பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் விரைவில் உடல்நலம் குணமடைய புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
ரஷ்ய பிரதமர் மிகைல் விரைவில் குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன். ரஷ்ய பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான பணிகளிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார் என நம்புகிறேன்.
உங்களுக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு என்றால் யாருக்கு வேண்டுமானாலும் தாக்கலாம். உங்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை யாருடனும் நேரடியாகப் பேசாமல் காணொளி மூலம் ஆலோசனை நடத்துங்கள்’ என கூறியுள்ளார்.
பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் பணிகளை தற்காலிகமாக துணைப் பிரதமர் ஆன்ட்ரி பெலுசோவ் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..