மொன்றியல் பகுதியில் பாடசாலைளையும் கடைகளையும் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட், தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பாடசாலைளையும் கடைகளையும் விரைவில் மீண்டும் திறப்பது கொவிட்-19 பாதிப்புகள் அதிக அளவில் பரவ வழிவகுக்கும். மொன்றியலில் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது. பொதுச் சுகாதார அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மே மாதம் 25ஆம் திகதி திட்டமிட்டபடி தொடக்கப் பாடசாலைகள், தினப்பராமரிப்பு நிலையங்கள் மற்றும் கடைகளை மீண்டும் திறப்பது பாதுகாப்பற்றது என்று அந்த அதிகாரிகள் கருதினால், தேவைப்படும் வரை அந்த மறு திறப்புகளைத் தள்ளி வைக்க தயங்கமாட்டோம்.
உயர்தரப் பாடசாலைகள், CEGEPS மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருக்கும் போது, தொடக்கப் பாடசாலைகள் மற்றும் தின பராமரிப்பு இல்லங்கள் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே மீண்டும் திறக்கப்படலாம்.
தனிமைப்படுத்தல் இல்லாவிட்டால், நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேருவதற்கான பெரிய ஆபத்து இருக்கும். இது குறித்து நான் முதலில் நான் கவலைப்படுகிறேன். நாங்கள் அறிவியலையும் அதன் முடிவுகளையும் பின்பற்றுவோம்.
நாங்கள் எந்த ஆபத்தான முடிவினையும் எடுக்கப் போவதில்லை. ஆனால், மொன்றியலில் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்றால், வணிகங்கள், பாடசாலைகள் மற்றும் தினப்பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படுவதை தாமதப்படுத்துவோம்’ கூறினார்.
0 Comments
No Comments Here ..