இணையத்தில் வைரலாகி வரும் தகவல்களில், உலக சுகாதார மையம் உலக மக்கள் தொகையை குறைக்க மக்களுக்கு நோய் பற்றிய தவரான தகவல்களை வழங்க திட்டமிட்டுள்ளதை இத்தாலி நாட்டு மருத்துவர்கள் கண்டறிந்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
வைரல் தகவலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகள், நோயின் தன்மை, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணம் என பல்வேறு பகீர் விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவலில் கொரோனா வைரஸ் உண்மையில் வைரஸ் இல்லை அது கிருமி என்றும் நுண்ணுயர் எதிர்ப்பி (Antibiotics) கொரோனா வைரஸ் தொற்றை சரிசெய்து விடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இரத்த உறைவு தான் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள் தேவைப்படாது என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆய்வு செய்ததில் வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. வைரல் தகவல்களில் உள்ள பெரும்பான்மை தகவல்களை மருத்துவர்கள், அறிவியில் ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முற்றிலும் தவறு என தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இந்த தகவல்கள், பெரும்பாலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடும் நைஜீரிய நாட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இருந்து தற்சமயம் இந்த தகவல்கள் வைரலாகி பீதியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளுக்கு இரத்த உறைவு காரணம் இல்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
0 Comments
No Comments Here ..