கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது பேரும், பளை மற்றும்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமாக பதினொரு பேர் வெளிநாடு செல்வதற்காக
கொழும்புக்குச் சென்று தங்கியிருந்த போது அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பிசிஆர் முடிவுகள் வெளிவர முன்னர் குறித்த இளைஞர்கள் வான் ஒன்றில் கொழும்பிலிருந்து சொந்த ஊர்களுக்கு நேற்றிரவு (05) திரும்பியிருக்கின்றனர் இந்த நிலையில் அவர்களில் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும், கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடி்படையில் உடனடியாக குறித்த இளைஞர்கள் கிளிநொச்சி கிருணபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர்.அத்தோடு குறித்த வானில் பயணித்த ஏனையவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..