இலங்கையில் கொவிட்19 தடுபூசியை பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது சுகாதார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி வசதிகளை பெற்றுகொள்வதற்காக இரண்டு படிமுறைகளின் கீழ் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை உரிய நேரத்தில் அதனை சமர்ப்பித்துள்ளது.
அதன் இரண்டாம் பகுதியான தடுப்பூசியை பெறல் மற்றும் அதற்கமைவான முற்காப்பீட்டு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கமைய சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி கொவேக்ஸிற்கான தடுப்பூசி விண்ணப்பத்தின் பி பகுதியை சமர்ப்பிப்பதற்கும் கொவோக்ஸ் வசதிகள் மூலம் தடுப்பூசி வகைப்படுத்தி வழங்கும் பட்சத்தில் குறித்த தயாரிப்பாளருடன் மேற்கொள்வதற்கும் சுகாதார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியை தயாரித்த பின்னர் அதனை சமமாக நாடுகளுக்கு இடையில் விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கங்களும் உற்பத்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய உலகலாவிய ரீதியான அணுகுமுறையே கொவோக்ஸ் என அழைக்கப்படுகின்றது
0 Comments
No Comments Here ..