சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம் தொடர்பாக மேற்கொள்ளபட்ட வைத்திய பரிசோதனையில் அவற்றில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மக்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு சீனாவில் டியான்ஜின் நகரில் தயாரிக்கப்பட்ட மூன்று ஐஸ்கிறீம் மாதிரிகள் பற்றிய விஞ்ஞான பரிசோதனையில் அவற்றில் வைரஸ் தொற்று படிந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்சாலை 4,836 ஐஸ்கிறீம் பொதிகள் பதப்படுத்தியுள்ளதுடன், அவற்றில் 2,086 ஐஸ்கிறீம் பொதிகள் தற்போது களஞ்சிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 1,812 ஐஸ்கிறீம் பொதிகள் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
0 Comments
No Comments Here ..