தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரியங்க பெர்னாண்டோவுக்கு தற்போது ராணுவ தளத்தில் பெரும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் முதல் பிரியங்க பெர்னாண்டோ பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
லண்டனில் நடந்த தமிழர்களின் ஆர்பாட்டத்தை பார்த்து, இனவெறி பிடித்த பிரியங்க பெர்னாண்டோ கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார்.
இது பல ஆங்கில ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த நிலையில் பிரித்தானிய அரசு அவரை உடனடியாக வேலையில் இருந்து விலக்குமாறு ஸ்ரீலங்கா அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் இலங்கை அரசாங்கம் அவரை நாட்டுக்கு திருப்பி அழைத்ததுடன் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இந்நிலையில் பிரியங்க பெர்னாண்டோ மீது விசாரணை மேற்கொள்ளாது தற்போது ராணுவ தளத்தில் பெரும் பதவி ஒன்றைக் வழங்கி வைத்துள்ளது.
0 Comments
No Comments Here ..