வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமானது.
இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை ஏ9 வீதி ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் 4 ஆவது ஆண்டு நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்துள்ள இன்றைய நாளில் குறித போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணிகளால் கண்களை கட்டி முழங்காலில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments
No Comments Here ..