உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்குத் தலைமை தாங்கிய தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமிற்கு கட்டமையிட்ட நபர் பற்றிய அதிரடி தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இதன்படி சஹ்ரானுக்கு கட்டளைகளைப் பிறப்பித்தர் அபூ என்று அழைக்கப்படுகின்ற நபர் என்பது தெரியவந்துள்ளது.
புலனாய்வுப் பிரிவு மற்றும் ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் இந்த நபர் பற்றிய தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.
கல்கிஸையில் உள்ள அடுக்குமாடி ஹோட்டலில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதக் கும்பல் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடிக்கு முன்பாக நின்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வீடியோவை ரில்வான் என்பவரே பதிவுசெய்திருந்தார்.
ரில்வான் அந்த காணொளியை இந்தியாவிற்கு அனுப்பிவைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஹ்ரான் உள்ளிட்ட கும்பல், விசேட செயலி (ஆப்) ஊடாக இந்த அபூ எனக் கூறப்படுகின்ற பிரதான சந்தேக நபருடன் அடிக்கடி பேச்சு நடத்தியிருப்பதாகவும் விசாரணையில் அம்பலமாகியிருக்கின்றது என்று ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..