நாம் நேசிக்கும் அனைவருக்கும் நாம் மட்டுமே நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நமக்கான பிரியமும், மரியாதையும் உண்மையாக இருந்தால் போதும்.
ஊடுருவிப்பார்த்தால், அப்படிப்பட்டவர்கள் மனம் தான் விசாலமாக, உண்மையாக, அன்பின் வடிவமாக இருப்பது புரியும்.
நம் அன்பு உண்மையெனில் நாம் அப்படிப்பட்டவர்களை அப்படியே வாழத்தான் விரும்புவோம். எதுவும் நிரந்திரமில்லா இவ்வுலகில், நாளை நாம் இல்லாமல் போய்விட்டால் அவர்களுக்கென மனிதர்கள் இன்னும் சிலர் மிஞ்சி இருப்பார்கள்.
நம்மில் மட்டுமே அன்பை காண்பவர்கள் நிலை நமக்குப் பிறகு என்னவாகும்? அது கொடுமையில்லையா? நாம் இனி இருக்க மாட்டோம் என தெரியும் வேளை அவர்கள் நமக்குப் பிறகு என்ன செய்வார்கள் என்ற நினைப்பில் நமக்கும் நம் மரணம் கொடுமையே!
அன்பை முடக்கிப்போடுவதும், அதுவே உண்மையான அன்பென நம்ப வைத்ததும் நம் சமுதாயத்தின் பல மூளைச் சலவைகளில் ஒன்றே!
0 Comments
No Comments Here ..