06,May 2024 (Mon)
  
CH
ஆரோக்கியம்

ஆயுர்வேத சமையல் முறை.......

பிராணா பிராணபிருத்தம்னாம் தடாயுக்தாய நிஹந்ந்த்யாசன்


விஷம் ப்ராணஹரம் தச்சா யுக்தி யுக்தம் ரசாயனம்


ஆயுர் என்றால் வாழ்வு வேத என்றால் அறிவு ; அறிவு வாழ்க்கையைப் பற்றிய அறிவு ஆயுர்வேதம்.


ஐம்புலன்களால் ஏற்றுக் கொள்ளப் படும் அனைத்தும் - வாயால் (உணவு, நீர்) மூக்கால்(மூச்சு காற்று ) காதால் (பண்ணிசை , இனிமையான இசை) தோல் மூலம் (சூரிய ஒளி) கண்களால் ( இயற்கை) - உணவாகும்.


சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ளும்போது அது நமக்கு நீண்ட ஆயுளையும் இளமையையும் தருகிறது. சரியற்ற அளவில் எடுத்துக் கொள்ளும்போது அது, நச்சுக்களை அதிகப் படுத்தி வாழ்க்கையையே கெடுக்கிறது. சரியான உணவை எடுத்துக் கொள்வதே நலமான வாழ்வைப் பெற முதற் படி. சரியான உணவை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது; சரியான விகிதாச்சாரத்தில் எடுத்துக் கொள்வதும் மிக முக்கியமானது ஆகும்.


போதுமான அளவு உணவின்மையின் விளைவாகவோ அல்லது சரியான முறையில் உணவின்மையாலோ  பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதன் விளைவு அதன் சுவை மற்றும் பண்புகளை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.


ஆயுர்வேதம் மூன்று விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துகிறது: சிகிச்சைமுறை, தடுப்பு மற்றும் உடல்நலப் பராமரிப்பு. இந்த மருத்துவ அறிவியல் ஒவ்வொரு நபரின் சிகிச்சைமுறை மற்றும் உணவைத் தனிப்பயனாக்க விழையும் ஒரு முறை. ஆயுர்வேத பாணியிலான சமையல் என்பது உணவு வகைகளை வெவ்வேறு உடல் வகைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நபரின் உணவுத் தேவை என்பதை உணர்த்துவதற்கான ஒரு அறிவார்ந்த வழிமுறையாகும்.


ஆயுர்வேத உணவு வகைகளை சாத்வீக, ராஜசிக் மற்றும் தமஸிக் ஆகிய மூன்று வகைகளில் முறைப் படுத்தலாம். இந்த வகையான உணவுகள் உடல் மற்றும் மனதில் வேறுபட்ட விளைவுகளைக் கொண்டுள்ளன.


சாத்வீக வகை:


சத்வா என்பது மனதில் தெளிவு, நல்லிணக்கம்  மற்றும் சமநிலை ஆகியவற்றை தூண்டுகிறது.


பின்வரும் உணவு சாத்வீகத்தை ஊக்குவிக்கிறது.


புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், சாலடுகள், புதிய பழ சாறுகள், தானியங்கள் (சிவப்பு அரிசி), மூலிகை தேநீர், புதிய பசும் பால், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், தேன், வெல்லம், அனைத்து மசாலா மற்றும் புதிதாக சமைக்கப்பட்ட உணவு.


ரஜஸிக் வகை:


ஆற்றல் மற்றும் செயலை தூண்டுவதும் படைப்பாற்றலைத் தூண்டுவதும் ஆகும்.


பின்வரும் உணவு ரஜஸிக் குணங்களை  ஊக்குவிக்கிறது.

புட்டிகளில் அடைக்கப் பட்ட உணவு வகைகள், பாசுமதி அரிசி, புளிப்பு கிரீம், பன்னீர், ஐஸ் கிரீம், ஈஸ்ட், சர்க்கரை, ஊறுகாய், வினிகர், பூண்டு, வெங்காயம் மற்றும் உப்பில் ஊறிய உணவு வகைகள்


 தமஸிக் வகை:


தமஸ் என்பது இருள், செயலற்ற நிலை , எதிர்ப்பு மற்றும் அடித்தளத்தை தூண்டும் மன இயல்புகள்.


பின்வரும் உணவு தமஸ் குணங்களை  ஊக்குவிக்கிறது.


மது வகைகள், மாட்டிறைச்சி, கோழிக்கறி, மீன், பன்றி இறைச்சி, முட்டை, உறைந்த உணவு, நுண்ணுயிர் உணவு, காளான், போதை மருந்துகள், தேநீர், காபி, வறுத்த உணவு, வறுத்த கொட்டைகள்ஆகியவை.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

 




ஆயுர்வேத சமையல் முறை.......

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு