குழந்தை எந்த காலத்தில் பிறக்கும்?
(கரு உருவாகும் காலம்)
பிறப்பும், இறப்பும் இறைவன் கையில்.
திருமணமான ஓரிரு மாதத்தில் அக்கம் பக்கத்தார் ,பெண்ணிடம் முதலில் கேட்கும் கேள்வி ஏதாவது விஷேசம் உண்டா என்று.
அதாவது கர்ப்பமாக இருக்கிறீயா என்று.
குழந்தை பேறு இருவர் சம்பந்தபட்டது.
ஜாதகத்தில் லக்னாதிபதி,
7, 5,9,குரு ,சுக்ர பகவான் வலுப்பெற்றவருக்கு காலகாலத்தில் திருமணம் ஆகி, ஒரு வருடத்தில் குழந்தையும் பிறந்துவிடும்.
ஆணுக்கு குரு புத்திரகாரகன்.
பெண்ணிற்கு செவ்வாய்,குரு, சுக்ரன் சம்பந்தம் வேண்டும்.
மருத்துவ ரீதியாக பெண்ணிற்கு மாத விலக்கான காலத்தில் இருந்து 9 நாள் கழித்து, கரு முட்டை நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும்.
1 .பெண் ஜாதகத்தில் சந்திரன் , செவ்வாய்க்கு 1,5,9 ஸ்தானங்களில் குருவின் சம்பந்தம் பெற்று லக்னாதிபதியுடன் தொடர்பு கொள்ளும் போது கரு உருவாகிறது.
2.கோட்சாரத்தில் லக்னாதிபதிபதிக்கு 1,5,9 மிடத்தில் குரு வரும் போதும் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
3.லக்னாதிபதியான கிரகம் அவரவர் லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் பயணம் செய்யும் போது ,குரு, சுக்ரன் தொடர்பு இருந்தாலும் கரு உண்டாகும்.
4.5ம் பதியும், லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்று ,கோட்சார குரு லக்னாதிபதியையோ,5மிடத்தையோ பார்த்தாலும் அந்த காலகட்டத்தில் ஏற்படும் கரு தங்கும்.
5.லக்னாதிபதி, 5,9ம்பதி, ஏதேனும் ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இரண்டாம்பதியும் அதனுடன் கூடினால் ,நிச்சியம் அந்த காலத்தில் குழந்தை உண்டாகும்.
இதற்கெல்லாம் அடிப்படையாக ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எந்த விதத்திலும் கெட கூடாது.5ம்பதி கெடக்கூடாது.குருவும் கெட கூடாது.
மேற்சொன்ன விதிகள், ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் ,குரு கெடாமல் இருந்தால் திருமணமான ஓரிரு வருடங்களில், குவா குவா சத்ததுடன் வீட்டில் தாலாட்டு கேட்கும்.
ஓம் நமசிவாய
0 Comments
No Comments Here ..