பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் பிரபல மலேசியன் பாடகர் முகின் ராவ்.
பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இவருக்கு ரசிகர்களாக இருக்க அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளத்தை கலக்குகிறது.
மலேசியா வாழ் தமிழ் குடும்பத்தில் பிறந்த முகேன்ராவ் எக்கச்சக்கமான ஆல்பம் பாடல்களை பாடி அதன் மூலம் அங்கு மிகவும் பிரபலமானவர். கடந்த பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ஆரம்பத்தில் யார் கண்ணிலும் படாமல் இருந்தவர் ஒருகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக மாறிப்போனார்.
தர்ஷன் மற்றும் முகின்ராவ் இருவரும் நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களாக மாறிப் போனாலும் போட்டி என்று வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாண்டது அனைவரையும் நெகிழச் செய்தது. மேலும் இதன் முகேன் ராவுக்கு எக்கச்சக்கமான பெண் ரசிகைகளின் எண்ணிக்கையும் கூடிப் போனது.
பிக் பாஸ் டைட்டிலை தட்டிச்சென்ற முகேன் ராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த வகையில் அறிமுக இயக்குனர் கவின் இயக்கும் வேலன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இதில் கென்னடி கிளப் புகழ் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூரி, பிரபு, தம்பி ராமையா, ப்ராங் ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வேலன் படத்தின் செமயான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது. அதில் புதுமாப்பிள்ளை கணக்காக முகேன் வேஷ்டி சட்டையில் வீட்டுக்குள் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டிருக்க கீழே கதாநாயகி மீனாட்சி அழகான பொம்மை போன்று அடக்க ஒடுக்கமாக உக்காந்து இருக்க பார்ப்பதற்கே மங்களகரமாக இருக்கும் இந்த வேலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் முகேன் ராவ் வெற்றி என்ற மற்றொரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..