ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் இந்த வருடம் இடம்பெறவுள்ள '2020-டோக்கியோ ஒலிம்பிக்' போட்டிக்கு அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜுலை மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையொப்பம் இட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவது ஆபத்தானது என அந்த நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். போட்டிகளில் முன்பயிற்சிகளுக்காக ஜப்பான் வந்துள்ள விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு தங்குமிட வசதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஜப்பானில் 500க்கும் அதிகமான நகரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நகரத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை இந்த காலப்பகுதியில் நடத்துவதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..