27,Nov 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையின் ஊடக அறிக்கை ஒன்று

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த யோசனைகள், முன்மொழிவுகளை அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அறிக்கை

தேர்தல் சட்டமறுசீரமைப்புக்கு பொது மக்களின் முன்மொழிவுகளைக் கோரும் பாராளுமன்ற விசேட குழு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த யோசனைகள், முன்மொழிவுகளை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலம் அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு அதன் தலைவர் சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி கூடியபோது பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த குழுவில் யோசனைகளை முன்வைப்பதற்கு எதிர்பார்க்கும் பொது மக்கள் மற்றும் ஏனைய ஆர்வமுள்ள அமைப்புக்கள் தமது முன்மொழிவுகளை தபால் மூலம் அல்லது sec.pscelectionreforms2021@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என இந்த விசேட பாராளுமன்ற குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைக்க விரும்புவோர் செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

பிரதிநிதித்துவங்களை வழங்குபவர்களிடமிருந்து வாய்மொழிமூல சான்றுகளைப் பெற்றுக்கொள்ள குழு விரும்பினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நேரத்தில் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்படுவர் என்றும் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.

Tamils4news எம்முடன் இந்த செய்திய பகிர்ந்துகொண்ட அரச ஊடகப்பிரிவு உத்தியோகத்தருக்கு நன்றிகள்

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இலங்கையின் ஊடக அறிக்கை ஒன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு