கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் மருந்தாக எஸ்ட்ராசெனெகா (கோவிஷீல்ட்) தடுப்பூசிகளைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்றுநோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் ஆலோசனையை அரசாங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பான நிலைப்பாட்டை தங்களுக்கு தெரிவிக்குமாறு உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிடம் வினவியுள்ளார்.
இது தொடர்பில், குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்ட்ராசெனேகா தடுப்பூசிக்கு உலகலாவிய ரீதியில் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்தநிலையில் இலங்கையர்களுக்கு இரண்டாவது அளவாக வழங்குவதற்கு சுமார் 600,000 குப்பி எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
எஸ்ட்ராசெனெகா மற்றும் பயோடெக் தடுப்பூசிகளின் கலவையானது, குறிப்பிடத்தக்க வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்று ஒரு ஜெர்மன் ஆய்வு தெரிவிக்கிறது.
இது தொடர்பில் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் நேற்று ஃபைசர் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் பற்றியும் விவாதித்துள்ளது.
இதேவேளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் இலங்கைக்கு 300,000 குப்பி ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
0 Comments
No Comments Here ..