அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை பிரதேச செயலாளர் அலுவலகம் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
சில வர்த்தக நிலையங்களை மட்டுமே திறப்பதற்கு பிரதேச செயலகங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் பல்வேறு பிரதேசங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளாத அதிக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் அலட்சியமாக செயற்படுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..