கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 150 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில், நான்கு மரணங்கள் சம்பவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலத்திற்குள் 150 கோவில் -19 தொற்றாளர்களும் நான்கு மரணங்களும் இடம் பெற்றுள்ள நிலையில் இது கடந்த சில தினங்களோடு ஒப்பிடும்போது சற்று குறைவான எண்ணிக்கையாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் 45 பேரும் இரண்டு மரணங்களும், ட்டக்களப்பு மாவட்டத்தில் 64 தொற்றாளர்களும், அம்பாறை சுகாதார சேவைகள் பணியக பிரதேசத்தில் 18 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 23 பேரும் இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..