அரச சேவையில் உள்ள வைத்தியர்கள் அனைவரும் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 63ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்த நிலையில் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் இந்த வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளது.
அரச வைத்தியர்கள் கட்டாய ஓய்வு பெறும் வயது 60ஆக இருந்த நிலையில் கடந்த அரசாங்கத்தில் அது 61ஆக நீடிக்கப்பட்டு தற்போது 63ஆக மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..