இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. இதில் 2 - 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரைக்கைப்பற்றியது.
கடந்த 12 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக இருபதுக்கு இருபது தொடரைக் கைப்பற்றியுள்ளது. தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
0 Comments
No Comments Here ..