09,May 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவு இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் முடிந்தளவு வேகமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தான் மக்களிடம் மீண்டும் ஒருமுறை கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியம். கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கொவிட் தடுப்பூசி பெறாதவர்கள் என அவர் கூறியுள்ளார்.

நாட்டுக்கான முக்கிய பாதுகாப்பு கொவிட் தடுப்பூசி மாத்திரமே. தொற்றுக்குள்ளாகியவர்களில் அதிகமானோர் தடுப்பூசி பெறாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இலகுவாக தடுப்பூசி பெறுவதற்காக நாடு முழுவதும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளா





இராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு