புவி வெப்பமடைதலின் தற்போதைய பாதிப்புகள் மற்றும் எதிர்கால அபாயங்கள் குறித்த சமீபத்திய உண்மைகளை ஐ.நா அறிவியல் குழு வழங்கி வருகிறது.
ஐ.நாவால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய அதிகாரபூர்வ அறிவியல் தகவல்களை தொகுத்து அறிக்கையாக நேற்று வெளியிட்டது.
கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐ.நா காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, புவி வெப்பமடைதலின் தற்போதைய பாதிப்புகள் மற்றும் எதிர்கால அபாயங்கள் குறித்த சமீபத்திய உண்மைகளை இந்த அறிக்கை வழங்கும்.
ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை கிளாஸ்கோவில் நடக்கும் ஐ.நா காலநிலை உச்சி மாநாடு, ஒவ்வொரு நாடும் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தவும், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெறவும் என்ன செய்ய முடியும் என்று விவாதிக்கும்.
புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் (3.6 டிகிரி பாரன்ஹீட்) க்கு கீழே வைத்துக்கொள்வதை இலக்காகக்கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 200 நாடுகள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..