பொதுமக்கள் ஒரு போதும் தாம் அணிந்திருக்கும் முககவசங்களை ஒருபோதும் அகற்ற வேண்டாம் என வர்த்தக அமைச்சர் முனைவர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் அவர் வெளியிட்ட பதிவில், தான் எப்போதும் முக கவசம் அணிந்திருப்பதாகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல மக்களிடையே தான் ஆரோக்கியமாக இருந்ததற்குஇதுவே காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பந்துல குணவர்தன தனது குறிப்பில், அந்த நேரத்தில் கொவிட்டால் பாதிக்கப்பட்டு, முககவசம் அணியாமல் தனது வாகனத்தை ஓட்டி வந்ததை அறியாத தனது சாரதி காரணமாக தானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஓகஸ்ட் 27 அன்று அதிகாரபூர்வ முகநூல் பதிவில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..