28,Apr 2024 (Sun)
  
CH
சுவிஸ்

2020ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது பிரபல பத்திரிகை

கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து, தலைசிறந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2020ஆம் ஆண்டிற்கான அதன் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் வருமாறு,

இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள் பட்டியலில், சுவீடன் முதலிடத்திலும் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலம் பின்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மிகவும் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளதோடு சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை, கல்வியில் சிறந்த நாடுகளாக, அமெரிக்கா முதலிடத்திலும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகியன முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.மேலும், தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில், தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா முறையே முதல் மூன்று இடங்களிலும் உள்ளன.

பெண்களுக்கான நாடுகள் பட்டியலில், டென்மார்க் முதலிடத்திலும் சுவீடன் இரண்டாவது இடத்திலும் நெதர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதனிடையே, சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகள் பட்டியலில், கனடா முதலிடம் பெற்றுள்ளதுடன் டென்மார்க் இரண்டாவது இடத்திலும் சுவீடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன் கனடா இரண்டாவது இடத்திலும் ஜப்பான், ஜெர்மனி, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, சுவீடன், நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் முறையே முதல் பத்து இடங்களில் உள்ளன.




2020ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது பிரபல பத்திரிகை

1 Comments

  • dbdb

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு