28,Mar 2024 (Thu)
  
CH
ஜரோப்பா

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் நட்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் உரிய நட்ட ஈட்டினை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஐந்து நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) லண்டனில் கூடி கலந்துரையாடியிருந்தனர்.

கனடா, உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவிலேயே உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் உரிய நட்ட ஈட்டினை வழங்க வேண்டும் என கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானதாக ஈரான் ஆரம்பத்தில் கூறியிருந்தாலும், பின்னர் மனித தவறு காரணமாக தங்களது ஏவுகணையே விமானத்தை தாக்கியதாக ஈரான் ஒப்புக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன், ஈரானுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென அமெரிக்காவும், கனடாவும் கோரி வருகின்றன.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் நட்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு