பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியைவிட எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அதிக கொழுப்பு கொண்டது.
தினமும் 100 கிராம் பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 100 கிராம் பாலாடைக்கட்டியில் கொழுப்பு (21 கிராம்), புரதம் (18 கிராம்), கார்போஹைட்ரேட் (3 கிராம்) போன்றவை இருக்கின்றன. இது 170 கலோரிகளை கொண்டது. கால்சியம், வைட்டமின் ஏ போன்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்களும் அதில் நிரம்பி இருக்கின்றன.
100 கிராம் பாலாடைக்கட்டி அன்றாட கால்சியம் அளவில் 25 சதவீதத்தையும், வைட்டமின் ஏ தேவையில் 22 சதவீதத்தையும் பூர்த்தி செய்துவிடும். பாலாடைக்கட்டியில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். காலை உணவுடன் பாலாடைக்கட்டியை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய நிலையில் இருக்கும். ஏனெனில் கொழுப்பு ஜீரணமாகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
அதனால் பசி உணர்வு தாமதமாகும். உடற்பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி உடல் எடையை குறைப்பதற்கு கலோரிகளை குறைப்பது அவசியமானது. அதற்கு பாலாடைக்கட்டி உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பாலாடைக்கட்டி சாப்பிடுவதோடு உடற்பயிற்சியும் செய்து வர வேண்டும். பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியைவிட எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அதிக கொழுப்பு கொண்டது. 100 கிராம் பாலாடைக்கட்டியில் 18 முதல் 19 கிராம் வரை உயர் ரக புரதம் இருக்கும். இது தசைகள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
100 கிராம் பாலாடைக்கட்டியில் 245 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் முக்கியமானது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேவை.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..