நீர்கொழும்பு - கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களை கடல் அலை அடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் எஞ்சிய நால்வரும் காப்பாற்றப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அம்பேவல பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் காணாமல் போயுள்ளதுடன், அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
0 Comments
No Comments Here ..