அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் (Gotabaya Rajapaksa)பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் (Mahinda Rajapaksa) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் அரச தலைவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் வரிசை கலாசாரத்தை பிரதமர் விமர்சித்துள்ளதாக தெரியவருகிறது.
திருமதி பண்டாரநாயக்காவின் 70-77 ஆட்சிக்காலத்தில் நிலவிய வரிசை கலாசாரமே அந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என பிரதமர் அரசதலைவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வியத்மக அமைப்பின் தலைவர்கள் தோல்வியடைந்துள்ளதாகவும், அரசியல்வாதிகளை அலட்சியப்படுத்துவதால் பல பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் அரசதலைவருக்கு அறிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..