06,Apr 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

அரசாங்கத்திடம் பதவிக்காக காத்திருக்கமாட்டேன்! பீ.பி.ஜயசுந்தர பதிலடி

நான் வேலையில்லா பட்டதாரி கிடையாது என்பதனால் அரசாங்கத்திடம் பதவி ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்க போவதில்லை என அரசதலைவரின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர (BP Jayasundera) தெரிவித்துள்ளதாக தென் இலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

தாம் அரசதலைவர் செயலாளர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் ஆலோசகர் பதவிக்கோ அல்லது வேறும் அரச பொறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் தனது தொழில் அனுபவங்களை ஒன்று திரட்டி நூல் ஒன்றை எழுத உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த தாம் எதிர்வரும் நாட்களில் ஓய்வாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திடம் பதவிக்காக காத்திருக்கமாட்டேன்! பீ.பி.ஜயசுந்தர பதிலடி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு