இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் நாளை திறந்து வைக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடால் (Trine Jøranli Eskedal) திறந்து வைக்க உள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நோர்வே தூதுவர், தூய்மையான ஆற்றல் பயன்பாடு வறுமையைக் குறைக்கவும், சுகாதாரம் மேம்படுத்த மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என நோர்வே நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 42 கிலோ வோற் (42KW) அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும் நோர்வே தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..