குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு ஒரு இலட்சம் அரச வேலை வாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரு வருகின்றது..
இதன்படி, விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரியின் தகவல்கள் கிராம உத்தியோகத்தரினால் அல்லது சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மத குருமார்கள் மற்றும் பிரிவிற்குப் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரினால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிழையான தகவல்களை உறுதிப்படுத்துவது, உத்தியோகத்திலிருந்து இடைநிறுத்தப்படுதல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பயிற்சிகால நியமனக் கடிதம் உரிய பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக வழங்கப்படும்.
பயிற்சி நடவடிக்கைகள் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு. பயிற்சிக் காலத்தில் 22ஆயிரத்து 500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக செலுத்தப்படுவதோடு, முறையான பயிற்சியின் பின்னர் ஓய்வூதிய உரித்துடைய நிரந்தர உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..