03,Dec 2024 (Tue)
  
CH
சுவிஸ்

வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் வெளியான பின்னணி

சுவிட்சர்லாந்தின் Zug நகரில் வனப்பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவர் மாயமானதாக தேடப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Zug மண்டலத்தில் உள்ள Unterägeri வனப்பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்றை சிலர் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த பொலிசார், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,

குறித்த பெண்மணி கடந்த 7 ஆம் திகதி முதல் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளதாகவும், அவர் தொடர்பில் பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

43 வயதான அவர் கடைசியாக Zug லேக் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அவர் எப்படி மரணமடைந்தார் என்பது தொடர்பில் உடற்கூராய்வுக்கு பின்னரே தெரியவரும் எனவும்,

இந்த விவகாரத்தில் மூன்றாவது ஒருவர் செயல்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.




வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் வெளியான பின்னணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு