வடக்கு மாகாணத்தில் உள்ள 37 கிராம சேவகர் பிரிவுகளை ஒன்றிணைத்து மகாவலி ஜே வலயமாக வர்த்தமானியில் வெளியிட மகாவலி அதிகார சபை தீர்மானித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிங்கள குடி பரம்பலை விரிவுப்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீலனை செய்யப்படும் என குறிப்பிடும் ஜனாதிபதி மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.
இராணுவம்,மகாவலி அதிகார சபை உட்பட அரச திணைக்களங்கள் தமிழர்களுக்கு எதிராகவே செயற்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற நிதி ஒழுங்குப்படுத்தல் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
.
0 Comments
No Comments Here ..