21,Nov 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்திய கலைஞர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.


பின்னர் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "நமது வாழ்க்கை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், நாம் யோகா மூலம் இணைந்துள்ளோம்” என்றார். நீண்ட நாட்களாக கிரிக்கெட் மூலம் இணைந்திருந்த நாம், தற்போது டென்னிஸ் மற்றும் சினிமா மூலம் இணைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை முக்கிய மையமாக சர்வதேச பொருளாதார நிதியம் பார்ப்பதாகவும் உலகம் முழுவதும் வங்கி சேவைகள் சிக்கலை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவின் வங்கிகளை பலர் பாராட்டுவதாக கூறிய மோடி, இதே போன்று ஏற்றுமதியிலும் இந்தியா புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக தெரிவித்தார். மேலும் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் ஒன்று புதிதாக திறக்கப்படும் என தெரிவித்தார்.





பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு