ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் ராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷியா கூறியுள்ளது. இந்நிலையில், கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷியா அழித்துள்ளது.
இதன் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரஷிய போர்க்கப்பலான இவான் குர்ஸை உக்ரைன் தாக்க முயற்சித்ததை அடுத்து உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர்,"போஸ்பரஸ் ஜலசந்தியிலிருந்து வடகிழக்கே 140 கிமீ தொலைவில் ரஷிய கடற்படைக் கப்பலின் நிலையான ஆயுதங்களிலிருந்து உக்ரைனின் அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டன" எனக்கூறியுள்ள்ளார்.
0 Comments
No Comments Here ..