வாட்டி வதைக்கும் வெப்பத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்க மற்றும் ஃபிரெஷ்ஷாக இருக்க மக்கள் குளிர்ச்சியான, அதிக சர்க்கரை இருக்கும் பானங்களை (Sugary drinks) பருக வேண்டும் என ஏங்குவது இயற்கை தான்.
ஆனால் கார்போனேட்டட் பானங்களை அதிகம் உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக நோயின் ஆபத்தை அதிகரிக்கும், அது டயட் சோடாவாக இருந்தாலும் சரி என்கின்றன ஆய்வுகள்.
இந்த பானங்கள் உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதை தவிர, சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்துடன் தொடர்புடையது.
ஏனென்றால் இந்த பானங்களில் வெற்றுகலோரிகள் (Empty Calories) மற்றும் அதிக அளவு சர்க்கரை இருக்கின்ற. கார்போனேட்டட் ட்ரிங்ஸ் (Carbonated drinks) பொதுவாக Fizzy drinks எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பானங்கள் கார்போனேட்டட் நீரில், கரைந்த கார்பன் டிஒக்ஸைடை (Dissolved carbon dioxide) கொண்டுள்ளன. கார்போனேஷன் ப்ராசஸின் போது உருவாக்கப்பட்ட கார்போனிக் அசிட் நம் நாக்கில் Tingly சென்சேஷனை ஏற்படுத்தி நம்மை அந்த பானங்களுக்கு அடிமையாக்குகிறது. சோடா, கோலா, சொஃப்ட் ட்ரிங்ஸ்களில் கார்போனேட்டட் தண்ணீர் உள்ளது.
Carbonated Drinks எவ்வாறு சிறுநீரகங்களை சேதப்படுத்துகின்றனபிரபல Transplant Physician-ஆன டொக்டர் புனித் புவானியா கூறுகையில், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டயட் சோடா அல்லது சாதாரண கார்போனேட்டட் பானங்களை உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்கிறார். கார்போனேட்டட் ட்ரிங்க்ஸ் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் ஆகிய இரண்டுமே கிட்னி ஸ்டோன் உற்பத்தியுடன் தொடர்புடையவை.
எனவே கார்போனேட்டட் பானங்களை (சோடாக்கள் மற்றும் ஃபிஸி பானங்கள்) தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவற்றில் நிறைய சர்க்கரை மற்றும் வெற்றி கலோரிகள் உள்ளன. மறுபுறம் ரெகுலர் மற்றும் டயட் ட்ரிங்க்ஸ்களும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்தை அதிகரிக்க கூடும். அதிக சோடா நுகர்வானது எடையை அதிகரிப்பதோடு, டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
எனவே சிறுநீரகங்கள் பாதிக்காமல் இருக்க ஃபிஸி பானங்களை உட்கொள்வதை குறைக்க வலியுறுத்துகிறார் டாக்டர் புனித் புவானியா.
பொதுவாக Carbonated beverages-களில் இனிப்பானது ஹை-ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் வடிவில் சேர்க்கப்படுகின்றன. கடந்த 2010-ல் கிட்னி இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, சோடாவில் உள்ள HFCS-ன் அதிக செறிவானது, யூரிக் ஆசிட்டின் லெவலை உயர்த்தும். நம் ரத்தத்தில் இருந்து இந்த ஆசிட்டை அகற்ற சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
இந்த நிலையில் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஃபிஸி பானங்களை குடிப்பது இயல்பாகவே நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்கிறார் டாக்டர் புவானியா.
டயட் சோடா ஏற்படுத்தும் அபாயங்கள்: Artificially Sweetened Carbonated Beverages-களில் சர்க்கரை இல்லை என்ற போதிலும், அவை சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடையவை. கடந்த 2010-ஆம் ஆண்டில் வெளியான ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட டயட் கோக்கை குடித்த பெண்களுக்கு கிட்னி ஃபில்ட்ரேஷன் ரேட்ஸ் (kidney filtration rate) சுமார் 30% வரை குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
எனினும் கிட்னி ஃபில்ட்ரேஷன் டெஸ்ட்கள் வயது, எடை, Muscle mass மற்றும் கர்ப்பம் போன்ற பிற காரணிகளால் பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தினசரி 2 கிளாஸுக்கும் குறைவான டயட் கோக் குடிப்பது சிறுநீரகத்தில் எவ்வித எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது என்கிறார்கள் நிபுணர்கள்.
கோலா & கிட்னி ஸ்டோன்ஸ்: கோலா குடிப்பது சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்காது. கடந்த 2009- வெளியான ஆய்வு முடிவுகளின்படி 2009 ஆய்வின் படி, காஃபின் இல்லாத கோலா பொருட்களை உட்கொள்வதால் ஆரோக்கியமான நபர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவில்லை. பொதுவாக கால்சியம், ஆக்சலேட், கிரியேட்டினின் மற்றும் உப்பு ஆகியவற்றிலிருந்து தான் சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
சிறுநீரக கற்கள் அசௌகரியம், வீக்கம் மற்றும் சிறுநீரகத்திற்கு சேதம் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர் புவானியா குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..