28,Jan 2025 (Tue)
  
CH
சமையல்

சுவையான பீட்ரூட் டிப்

தேவையான பொருட்கள்:


பீட்ரூட் - 1 கப் (துருவியது)

கெட்டி தயிர் - 2 கப்

பூண்டு - 2 பல்

காய்ந்த புதினா இலைகள் -1½ டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு


செய்முறை:


பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு அகன்ற கிண்ணத்தில் பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், பீட்ரூட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

இதை 5 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும். பின்னர் இந்தக் கலவையுடன் கெட்டி தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து, அதன் மேலே ஆலிவ் எண்ணெய் மற்றும் காய்ந்த புதினா இலைகள் தூவி பரிமாறவும். சூப்பரான பீட்ரூட் டிப் ரெடி.




சுவையான பீட்ரூட் டிப்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு