முக்கிய பல தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இன்று கூடவிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்மட்ட குழுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக இந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தை பிரிதொரு தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..